சுஷாந்த் தற்கொலை விவகாரம் குறித்து காதலி ரியா மீது சுஷாந்த் தந்தை FIR பதிவு செய்து பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் .
இந்நிலையில், கடந்த ஜூன் 14அன்று இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் பலரும் பாலிவுட் திரையுலகமே அவரின் மரணத்திற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டி வருகின்றனர்.கடந்த சில நாட்களாக சுஷாந்த் சிங் குறித்த செய்திகளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.மேலும் அவரது மரணத்திற்கு காரணம் என்ன என்பதை அறிய போலீசார் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது சுஷாந்த் சிங்கின் தந்தை ரியா ரியா சக்ரபோர்த்தி மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். மேலும் சுஷாந்த் சிங்கின் தந்தை ரியா மீது பாட்னாவில் உள்ள காவல் நிலையத்தில் FIR பதிவு செய்துள்ளார். அதில் எனது மகன் சினிமாவை விட்டு விட்டு கேரளாவில் வேளாண்மை செய்ய விரும்பியதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரியா, தனது பேச்சை கேட்கவில்லை என்றால் உங்களது மருத்துவ அறிக்கையை ஊடகங்களுக்கு காண்பித்து உங்களை பைத்தியம் என்று அனைவருக்கும் சொல்லுவேன் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் சுஷாந்த் ரியாவின் பேச்சை கேட்காத நிலையில், அவரது வீட்டில் முக்கியமான பொருள்களை ரியா எடுத்து சென்றதாக கூறிய சுஷாந்த் சிங்கின் தந்தையான கே. கே. சிங், தனது மகனின் தொலைபேசி எண்ணையும் ரியா பிளாக் செய்திருந்தார். இதனையடுத்து சுஷாந்த் எனது மகளை அழைத்து, ரியா செல்வதை கேட்கா விட்டால் என்னை பைத்தியம் என்று எல்லோரிடமும் சொல்வாள் என்றும், அப்போது யாரும் எனக்கு எந்த வேலையும் தர மாட்டார்கள் என்றும், நீங்கள் பேரழிவிற்கு ஆளாக நேரிடும் என்றும் அச்சுறுத்தியதாக அறிவித்துள்ளார்.
மேலும் சுஷாந்த் 2019ல் ரியாவை சந்தித்த பின்னரே அவர் மன நோயால் பாதிக்கப்பட்டுதாகவும், சுஷாந்த் மன நோய்க்கு சிகிச்சை பெற்றிருந்தால் ஏன் அவரது குடும்பத்தினரின் ஒப்புதல் வாங்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். அதனையடுத்து சிகிச்சையின் போது சுஷாந்தை ரியா அவரது வீட்டுக்கு அழைத்து சென்றதாகவும், அவருக்கு அதிகப்படியான மருந்துகளை கொடுத்ததாகவும், ஆனால் மற்றவர்களிடம் சுஷாந்திற்கு டெங்கு காய்ச்சல் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மே ரியா முன்னணி நடிகையாக பணிபுரியும் படங்களில் மட்டுமே சுஷாந்த் கையெழுத்திட வேண்டும் என வற்புறுத்தியதாகவும், 2019ல் சுஷாந்த் வங்கி கணக்கில் 17 கோடி ரூபாய் வைத்திருந்தார். ஆனால் அதில் 15கோடி வரை அடுத்த சில மாதங்களில் பல கணக்குகளில் மாற்றப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். எனவே ரியா மற்றும் அவரது கூட்டாளிகளை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பீகார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…