மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கை நினைவு கூறும் வகையில் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை நினைவு பக்கமாக மாற்றியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் .
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பல பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருவதோடு பலரும் பாலிவுட் திரையுலகமே அவரின் மரணத்திற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டி வருகின்றனர்.இந்த நிலையில் தற்போது அவரது மறைவுக்குப் பின்,அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு நினைவுப் பக்கமாக (memorialized) மாற்றப்பட்டுள்ளது.
அதாவது ஒருவரின் மறைவுக்குப் பின் அவரது சமுக வலைதள பக்கம் அவரது நினைவாக ஒரு மாற்றமும் செய்யப்படாமல் அப்படியே வைக்கப்படும் .அதே சமயம் அந்த கணக்கின் பக்கத்தில் ‘நினைவில் கொள்கிறோம்'(remembering) என்று குறிப்பிடப்பட்டிருக்கும் .இதன் முலம் அவர் பகிர்ந்த எந்த பதிவுகளையும் , தகவல்களையும் மாற்றவோ,நீக்கவோ இயலாது .எனவே தற்போது சுஷாந்த் சிங்கின் இன்ஸ்டாகிராம் பக்கமும் நினைவு பக்கமாக மாற்றியுள்ளனர் . இன்ஸ்டாகிராமில் இந்த புதிய அம்சம் கடந்த மாதம் தான் அறிமுகம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…