நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பதை அறிய அவரது சமூக ஊடக கணக்குகளை ஸ்கேன் செய்தும் , உளவியல் பிரேத பரிசோதனை செய்தும் , சுமார் 9 மணி நேரம் வரை காதலியான ரியா சக்கரவர்த்தியிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் .
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பல பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்ததோடு பலரும் பாலிவுட் திரையுலகமே அவரின் மரணத்திற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் சுஷாந்த் சிங்கின் மன அழுத்தத்திற்கு காரணம் என்று அவரது நண்பர்கள் பலரிடம் விசாரணை நடத்திய போது ,அவரது தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து யாருக்கும் அதிகம் தெரியாது என்று கூறியதாக பந்த்ரா போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.இந்த நிலையில் மும்பை போலீஸிலுள்ள சைபர் செல் சுஷாந்த் சிங் மரணத்திலுள்ள மர்மத்தை கண்டுபிடிக்க புது முயற்சி ஒன்றை கையாளுகின்றனர்.
அதாவது மறைந்த சுஷாந்த் சிங்கின் சமூக ஊடக பக்கங்களை ஸ்கேன் செய்து,அவர் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்த பதிவுகளையும் , ரசிகர்கள் மற்றும் நண்பர்களிடம் அளித்த உரையாடல்களையும் ,யூடுயூப் சேனல்களுக்கு அளித்த பேட்டிகளையும் பார்த்து படித்து வருவதாக கூறியுள்ளனர்.அவ்வாறு ஒரு பதிவில் ரசிகர் ஒருவரிடம் அவர் கூறியதாவது , எனக்கு சினிமாயுலகில் காட்பாதர் என்று யாரும் இல்லை என்று கூறியதோடு ,தனது படத்தை பார்க்குமாறு வற்புறுத்தி உள்ளார்.இல்லையென்றால் தனது இடத்தை மற்ற சிலர் ஆக்கிரமிப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் மும்பையில் உள்ள எல்.எச்.ஹிராந்தினி மருத்துவமனையின் மனநல மருத்துவரான ஹரிஷ் ஷெட்டி கூறுகையில், சமூக ஊடகங்களை ஸ்கேன் செய்வது எவ்வளவு முக்கியமோ ,அதை போன்று இதை போன்ற வழக்கில் உளவியல் பிரேத பரிசோதனையும் மிகவும் முக்கியமானது என்று கூறினார்.அதாவது இறந்த ஒருவரின் மருத்துவ மற்றும் மனநல அறிக்கைகளை ஸ்கேன் செய்வதன் மூலம் அவரது சிறுவயது முதல் தற்கொலை செய்த கொண்ட நாள் வரையிலான வாழ்க்கையை பயணத்தை உள்ளடக்கியது.இதன் மூலம் அவரது உறவினர்களையும் , நெருங்கிய நண்பர்களையும் சந்திக்கும் செயல்முறை.எனவே அவரது மரணத்தின் பின்னணியை கண்டறிய சுஷாந்த் சிங்கின் உளவியல் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறியுள்ளார்.
அதன்படி அவரது காதலியான ரியா சக்கரவர்த்தியை மும்பை போலீசார் சுமார் 9 மணி நேரம் வரை விசாரணை செய்ததை அடுத்து,அவர் ஜூன் 6ம் தேதி இருந்ததால் தன்னை தனியாக விடும்படி கேட்டுக் கொண்டதாக ரியா கூறியுள்ளார்.இவர்கள் இருவரும் ரொமான்ஸ் படத்தின் போது சந்தித்து,அதன் பின்னர் பல படங்களில் இணைந்து பணியாற்றி காதல் செய்ததாகவும் கூறினார்.மேலும் அவர் மன அழுத்தம் காரணமாக தன்னை மற்றவர்களிடமிருந்து ஒதுக்கி பூனாவிலுள்ள அவரது பண்ணை வீட்டில் தங்குவார் என்றும் ,மன உளைச்சலுக்கு ஆளாகிய அவர் மருத்துவரிடம் அணுகி மருந்துகளை உட்கொள்ள தொடங்கி , அதன் பின்னர் சில நாட்கள் மருந்து எடுப்பதை நிறுத்தி விட்டதாகவும் கூறினார்.மேலும் மும்பை போலீசார் பலரை விசாரணை நடத்தி வருவதோடு சுஷாந்த் சிங்கின் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த மும்பையில் உள்ள பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் அதற்கான ஆவணங்களை வழங்குமாறும் கேட்டுள்ளனர்.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…