மீண்டும் சுஷாந்த் சிங்கின் மறைவால் தற்கொலை செய்து கொண்ட 15வயது சிறுமி.!

Published by
Ragi

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து அவரின் தீவிர ரசிகையான 15வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் .

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பல பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்த வருவதோடு பலரும் பாலிவுட் திரையுலகமே அவரின் மரணத்திற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஜூன் 17ம் தேதி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் உள்ள போர்ட் பிளேரை சேர்ந்த 15 வயதான மாணவி ஒருவர் சுஷாந்த் சிங் குறித்து தனது டயரியில் எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து அந்தமான் டிஜிபி கூறியதாவது,சில நாட்களாக சிறுமி மன அழுத்தத்தில் இருந்து வருவதாகவும் , மறைந்த சுஷாந்த் சிங் குறித்து தான் இறப்பதற்கு முன்பு தனது டயரியில் நிறைய எழுதி வந்ததாகவும் சிறுமியின் பெற்றோர்கள் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.இதிலிருந்து சிறுமிக்கு சுஷாந்த் சிங்கை பிடிக்கும் என்றும் ,அவரது ரசிகையாக இருந்திருக்க கூடும் என்றும்,அவரது இறப்பை தாங்க இயலாமல் மன அழுத்தத்திற்கு உள்ளானதால் இறந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.சமீபத்தில் தான் உத்திரப் பிரதேசத்தில் உள்ள பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் சுஷாந்த் சிங்கின் மரணத்தை தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…

7 hours ago

பெரியார் குறித்து சீமான் பேச்சு! கலவரம் வேண்டாம் என அமைதியாக இருக்கிறோம் – வைகோ

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார்.  இதன் காரணமாக…

8 hours ago

ரசிகர்களுக்கு மீண்டும் சர்ப்ரைஸ்! STR51 படத்தின் வெறித்தனமான அப்டேட்!

சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…

8 hours ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : டிக்கெட் வாங்கிவிட்டீர்களா? ஐசிசி கொடுத்த முக்கிய அப்டேட்!

துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…

9 hours ago

பிப் 5 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! ஓய்ந்தது பரப்புரை!

ஈரோடு :  கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…

9 hours ago

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை., தொடர் தாக்குதல்., கனிமொழி கடும் விமர்சனம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…

10 hours ago