தனது பெண் தோழியிடம் இருந்து போதை பொருட்களை வாங்கிய சுஷாந்த்சிங் ராஜ்புட்.!? வெளியான பகீர் தகவல்கள்…
நடிகை ரியா சக்ரவர்த்தி போதை பொருட்களை நடிகை சாமுவேல் மிராண்டா, ஷோயிக் சக்ரவர்த்தி, திபேஷ் சாவந்த் மற்றும் பலரிடமிருந்து வாங்கி அதனை மறைந்த நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட்டிடம் கொடுத்துள்ளாராம்.
ஜூன் 14, 2020ஆம் தேதி MS.தோனி திரைப்படம் மூலம் புகழ் பெற்ற நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் உயிரிழந்தார். அதன் பிறகு பாலிவுட் சினிமாவில் ஒரு புயலே வீச தொடங்கியது.
நேபோட்டிசம் (பாகுபாடு பார்ப்பது), போதை பொருள் வழக்குகள் என பாலிவுட் சினிமாவே ஆட்டம் கண்டுவிட்டது. இதில் நேபோட்டிசம் உட்கட்சி பிரச்சனை. ஆனால், போதைப்பொருள் வழக்கு தற்போது வரை நீண்டு கொண்டே செல்கிறது.
இந்த போதைப்பொருள் வழக்கில் சுஷாந்த்சிங் ராஜ்புட்டின் பெண் தோழி ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து அவர் மீதும் வழக்கு பதியப்பட்டது. மேலும் அவரது சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தி மீதும் வழக்குகள் பாய்ந்தன.
அதன் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது கூடுதல் தகவல்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மூலம் கிடைத்துள்ளது. அதாவது, நடிகை ரியா சக்ரவர்த்தி போதை பொருட்களை நடிகை சாமுவேல் மிராண்டா, ஷோயிக் சக்ரவர்த்தி, திபேஷ் சாவந்த் மற்றும் பலரிடமிருந்து வாங்கி அதனை மறைந்த நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட்டிடம் கொடுத்ததாக வழக்கில் முக்கிய குறிப்பாக பதியப்பட்டுள்ளது.