சுஷாந்தை அடுத்து தற்கொலை செய்து கொண்ட கன்னட நடிகர்.!
கன்னட சீரியல் நடிகரான சுஷீல் கவுடா நேற்றைய தினம் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத், மனஅழுத்தம் காரணமாக ஜூன் 14 அன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டு மொத்த இந்திய திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் தற்போது மற்றொரு இளம் நடிகரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ‘அந்தபுரா’ என்ற கன்னட சீரியல் மூலம் பிரபலமானவர் சுஷீல் கவுடா. இவர் நேற்று தனது சொந்த ஊரான கர்நாடகாவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
முன்னணி நடிகரான துன்யா விஜய் அவர்கள் நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுஷீல், தனது படத்தை பார்க்காமலே உயிரிழந்த சம்பவம் கன்னட திரையுலகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து அவரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், அதன் முடிவை வைத்தே அடுத்தக்கட்ட விசாரணை தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது அவருக்கு பல பிரபலங்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.