சுஷாந்த் சிங் இறந்த சோகத்தில் அவரது வீட்டு நாய் ஃபட்ஜ் உணவு சாப்பிடமால் உயிரிழந்ததாக கூறிய தகவல் பொய் என்று நெருங்கிய நபர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் .
இந்நிலையில், கடந்த ஜூன் 14அன்று இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பல பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்த வருவதோடு பலரும் பாலிவுட் திரையுலகமே அவரின் மரணத்திற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டி வருகின்றனர்.கடந்த சில நாட்களாக சுஷாந்த் சிங் குறித்த செய்திகளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சுஷாந்த் சிங் தனது வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணி ஃபட்ஜ் என்ற கருப்பு லேப்ரடார் நாயின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.அது சுஷாந்த் மரணத்தை தொடர்ந்து எதுவும் சாப்பிடாமல் உடல்நலம் மோசமாகி உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.தற்போது அந்த செய்தி முற்றிலும் பொய் என்று சுஷாந்த் சிங்கின் நெருக்கமான நபர் தெரிவித்துள்ளார்.அதாவது ஃபட்ஜ் மட்டுமின்றி சுஷாந்தின் நான்கு நாய்களும் நலமாக உள்ளது என்று கூறியதோடு அதன் புகைப்படத்தையும் வெளியிட்டார்.சுஷாந்த் வழக்கமாக ஃபட்ஜ் உடன் இணைந்துள்ள புகைப்படைங்களையும், வீடியோக்களையும் வெளியிடுபவர் . அந்த வகையில் ஃபட்ஜுடன் இணைந்து விளையாடும் சுஷாந்தின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…