50முறை தொலைபேசி எண்ணை சுஷாந்த் மாற்றினார்-கேதார்நாத் பட இயக்குனர்.!

Default Image

கேதார்நாத் படம் வெளியான போது சுஷாந்த் தனது எண்ணை 50 முறை மாற்றியதாகவும் ,அவர் நமக்கு இழப்பு தான் என்றும் கேதார்நாத் பட இயக்குனர் அபிஷேக் கபூர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் .

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பல பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்த வருவதோடு பலரும் பாலிவுட் திரையுலகமே அவரின் மரணத்திற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டி வருகின்றனர்.இவரது மரணத்திற்கான காரணத்தை போலீசார் விசாரித்து வரும் நிலையில் கேதார்நாத் பட இயக்குனரான அபிஷேக் கபூரை விசாரித்துள்ளனர் .

 சுஷாந்த் சிங் மற்றும் சாரா அலிக்கான் நடிப்பில் 2018ல் வெளியான ‘கேதார்நாத்’ பட இயக்குனரான அபிஷேக் கபூர் சுஷாந்த் குறித்து கூறியதாவது, கேதார்நாத் படம் வெளியான போது சுஷாந்த் சிங் தனது தொலைபேசி எண்ணை 50 முறை மாற்றினார் . ஏனெனில் சமூக வலைத்தளங்களில் முழுவதும் அவரை அவதூறாக பேச தொடங்கினர் . மேலும் அனைவரும் சாராவை குறித்து கூறியதால் ,அவர் தனக்கான அன்பை பெறவில்லை என்பதை அவரால் பார்க்க முடிந்தது . அதனையடுத்து அவர் என்னிடம் பேசவில்லை என்றும் ,சுஷாந்தின் இறப்பு நமக்கு ஒரு வகையான இழப்பு என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live ilayaraja
good bad ugly - gv prakash
India vs New Zealand Final
tvk poster
TVKVijay - TN govt
MKStalin - PINK AUTO
Tvk executives arrested