ஆஸ்கர் ரேஸில் இணைந்த சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.!

ஆஸ்கர் ரேஸில் இணைந்துள்ள சூரரைப்போற்று சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.
நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் ஓடிடி தளமான அமேஸான் பிரைமில் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம், இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாரை மையப்படுத்தி உருவாக்கப்ட்டுள்ளது. ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் சூரரைப் போற்று மிக சிறந்த படமாக அமைந்தது. சூர்யாவின் நடிப்பு அத்தனையும் சிறப்பு என கொண்டாடினர். சூரரைப்போற்று திரைப்படத்தை பார்த்த திரைத்துறை பிரபலங்கள் பலருமே பாராட்டி தீர்த்தனர். தற்போது சூரரைப் போற்று படக்குழுவினரின் அபாரமான உழைப்புக்கு மேலும் பெருமைச் சேர்க்கும் வகையில் ஒரு விஷயம் நடந்துள்ளது.
அதாவது, சினிமாவில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது பொதுப் பிரிவில் சூரரைப்போற்று திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த கதையாசிரியர், சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடுகிறது. இந்த முறை கொரோனா அச்சுறுத்தலால் ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர்.
அதன்படி ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் ரேஸில் இணைந்துள்ள சூர்யாவின் சூரரைப்போற்று ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#SooraraiPottru joins OSCARS!!! And is now live on the Academy Screening Room!!@Suriya_offl #SudhaKongara @rajsekarpandian @gvprakash @nikethbommi @Aparnabala2 @editorsuriya @jacki_art @guneetm @sikhyaent @SonyMusicSouth @PrimeVideoIN https://t.co/gM8Obf1aVP
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) January 26, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
April 24, 2025