சூர்யா நடித்து முடித்துள்ள சூரரை போற்று படத்தினை ஹிந்தியில் ரீமேக் செய்ய போவதாகவும் ,அதில் ஷாஹித் கபூர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது .
நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும்ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்யும் இந்தபடத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.இப்படத்தை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர் என்றே கூறலாம் .ஆனால் தற்போது பரவி வரும் கொரோனா பிரச்சனை முடிந்ததும் திரையில் காணலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது.
இந்த படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் மற்றும் தீம் மியூசிக் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதகவும், மேலும் இப்படத்தின் ரீமேக்கில் நடிகர் ஷாஹித் கபூர் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…