ஓடிடியில் வெளியகிறது சூர்யாவின் அடுத்த திரைப்படம்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம் வரும் நவம்பர் மாதம் நேரடியாக அமேசான் பிரேமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டி திரையரங்குகள் திறந்தவுடன் படத்தை இந்த ஆண்டு இறுதியில் வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சூர்யா வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.
இதற்கிடையில், இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சிறப்பு தோற்றத்தில் ஜெய்பீம் என்ற படத்தில் நடிக்கிறார். பழங்குடியின மக்களின் பிரச்சனைகள், அவர்களது வாழ்க்கை ஆகியவற்றை முக்கியமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் சூர்யா பழங்குடியின மக்களுக்காக போராடும் வழக்கறிஞராக நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 23-ஆம் தேதி வெளியீடபட்டது.
இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், ஜெய்பீம் திரைப்படம் நேரடியாக வரும் நவம்பர் மாதம் அமேசான் பிரேமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Equality is our birth right!!#JaiBhimOnPrime this November @PrimeVideoIN#Jyotika @tjgnan @prakashraaj @RSeanRoldan @srkathiir @KKadhirr_artdir @philoedit @rajisha_vijayan #Manikandan @jose_lijomol @PoornimaRamasw1 @rajsekarpandian@2D_ENTPVTLTD @proyuvraaj @SonyMusicSouth pic.twitter.com/dvL98EQwgb
— Suriya Sivakumar (@Suriya_offl) August 5, 2021
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜீஷா விஜயன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். படத்தை 2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்கிறார்.