15மில்லியன் பார்வையாளர்களை ரசிக்க வைத்த சூர்யாவின் ‘காட்டுப்பயலே’ பாடல்.!
சூர்யாவின் காட்டுப்பயலே பாடல் 15மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
இயக்குநர் சுதா கோங்குரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரரை போற்று’. கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘காட்டுப்பயலே’ பாடல் வெளியாகி டிரெண்டிங்கில் இடம் பெற்றது. சமீபத்தில் சூரரை போற்று படத்தை அமேசான் பிரேமில் வரும் அக்டோபர் 30ம் தேதி வெளியிடவுள்ளதாக சூர்யா அவர்கள் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது காட்டுப்பயலே பாடல் 15 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த பாடல் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது.
Thanks for the 15 million love for #KaattuPayale https://t.co/MoTo8pXSsd pic.twitter.com/ioOETBxDIf
— G.V.Prakash Kumar (@gvprakash) August 27, 2020