சூர்யாவின் சூரரை போற்று படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து மீண்டும் ஓடிடியில் சூர்யாவின் புதிய படம் வெளியாக உள்ளது.
நடிகர் சூர்யா தற்போது நவரசா என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த திரைப்படத்திற்கான மூன்று லுக் போஸ்டர்களும் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. மேலும் அவரது பிறந்தநாளன்று சூர்யாவின் 39 வது படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டது. இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து சிறப்பு தோற்றத்தில் ஜெய் பீம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் பழங்குடியின மக்களின் பிரச்சனைகள், அவர்களது வாழ்க்கை இவற்றை முக்கியமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தில் சூர்யா பழங்குடியின மக்களுக்காக போராடும் வழக்கறிஞராக நடிக்கிறார். இந்த படத்தை சூர்யா 2 டி நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ளார்.
இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜீஷா விஜயன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். தற்போது இந்த படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதற்கு முன்னர் நடிகர் சூர்யா நடிப்பில் ஓடிடியில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் பெரிய அளவில் வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…