வந்தாச்சு ரசிகளுக்கு சூர்யாவின் பர்த்டே ட்ரீட்.! சூரரை போற்று படக்குழுவினரின் பர்த்டே ஸ்பெஷல்.!

Default Image

சூர்யாவின் பர்த்டே ட்ரீட்டாக ரசிகர்களுக்கு சூரரை படத்திலிருந்து காட்டுப்பயலே பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் சூர்யா, ஜூலை 23ம் தேதியான இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.தற்போது பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பல பிரபலங்கள் இணைந்து காமன் டிபியை வெளியிட்டு டிரெண்டிங்கில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள சூரரை போற்று படத்தின் படக்குழுவினர் இணைந்து பர்த்டே ஸ்பெஷலாக தமிழில் ‘காட்டுப்பயலே’ என்ற பாடலையும், தெலுங்கில் “AakaasamNeeHaddhuRa” என்ற பாடலையும் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது சுதா கோங்குரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரை போற்று படத்திலிருந்து ‘காட்டுப்பயலே’ மற்றும் AakaasamNeeHaddhuRa” என்ற பாடலின் 1நிமிட வீடியோ வெளியாகியுள்ளது. ஜி .வி .பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு தீ குரல் கொடுத்துள்ளார் .செம ரொமான்டிக் பாடலான அந்த பாடலை தற்போது  ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்