சூர்யாவின் பர்த்டே ட்ரீட்.! செம்ம வெயிட்டிங்கில் ரசிகர்கள்.!

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சூரரை போற்று படத்திலுள்ள காட்டுபயலே பாடலின் ஒரு நிமிட வீடியோவை ஜூலை 23ம் தேதி காலை 10மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. ரிலீஸ்க்கு தயாராக இருந்த படம் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இந்த படத்தின் முக்கியமான அறிவிப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது சூர்யாவின் பர்த்டே ட்ரீட்டாக வரும் ஜூலை 23ம் தேதி சூரரை போற்று படத்திலுள்ள ‘காட்டுபயலே’ என்ற பாடலின் 1நிமிட வீடியோவை காலை 10 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை தீய் அவர்கள் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இதனை கேட்ட ரசிகர்கள் சூர்யாவின் பிறந்தநாளுக்காக மிகவும் காத்திருக்கின்றனர்.
1 Min video of #KaattuPayale awaits you on 23rd July @ 10AM!
Sung by #dhee#SooraraiPottru#KaatukaKanule #AakasamNeeHaddhuRa@Suriya_offl #SudhaKongara @rajsekarpandian @nikethbommi @Aparnabala2 @deepakbhojraj @PoornimaRamasw1 @gopiprasannaa pic.twitter.com/QoroDifv5Z— G.V.Prakash Kumar (@gvprakash) July 19, 2020