சூர்யாவின் பர்த்டே ஸ்பெஷல்.! சூரரை போற்று படத்தின் முக்கிய அப்டேட் விரைவில் – ஜி. வி.!

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சூரரை போற்று படத்தின் முக்கிய அப்டேட் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக ஜி. வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா தற்போது சுதா கோங்குரா இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் சூரரை போற்று. ரிலீஸ்க்கு தயாராக இருந்த படம் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும், ஹரியின் அருவா படத்திலும், கே. வி. ஆனந்த் இயக்கத்தில் அயன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் வரும் ஜூலை 23ம் தேதி சூர்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்றைய தினம் அவரது காமன் டிபியை பல பிரபலங்கள் இணைந்து வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து சூரரை பட இசையமைப்பாளரான ஜி. வி. பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் சூர்யாவின் பிறந்தநாள் தினத்தன்று சூரரை போற்று படக்குழுவினர் ஒரு ஸ்பெஷல் அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், வரும் நாட்களில் அதனை குறித்த விவரங்கள் வெளியாகும் என்று கூறியுள்ளார். இதிலிருந்து சூர்யா பிறந்தநாளன்று சூரரை போற்று படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் சூர்யா ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.
Something special from team #SooraraiPottru is on the way for Suriya sirs bday …. details in the coming days … #update
— G.V.Prakash Kumar (@gvprakash) July 11, 2020