சூர்யாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வீடு திரும்பி ஓய்வு எடுத்து வருவதால் அவரின் 40 வது படத்திற்கானபூஜையில் இன்று கலந்து கொள்ளமுடியவில்லை.
நடிகர் சூர்யா தற்போது சூரரைப்போற்று திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 40 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும் நடிகர் சத்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த பூஜையில் பாண்டியராஜ், டி.இமான், பிரியங்கா அருள் மோகன், தேவதர்ஷினி, சரண்யா, சத்யராஜ் என பலர் கலந்துகொண்டார்கள் ஆனால் சூர்யா கலந்துகொள்ளவில்லை.
ஏனென்றால் கடந்த 7 ஆம் தேதி சூர்யாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 12 ஆம் தேதி வீடு திரும்பினார். அவர் ஓய்வு எடுக்க சிறிது நாட்கள் ஆகும் என்பதால் சூர்யா படத்தில் இணைய சிறிது நாட்கள் ஆகும். மேலும் இந்த படத்திற்கான பூஜை தொடங்கியுள்ள புகைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு சூர்யா விரைவில் கலந்துகொள்வார் என்று பதிவிட்டுள்ளது.
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…