சூர்யா தவறாகவும் நடக்க மாட்டார், தவறாகவும் பேச மாட்டார் என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று முன் தினம் நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிக்கையில்,நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதுல் சொல்வது போல் அவலம் எதுவுமில்லை.
ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழக்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என்று கூறியிருந்தார்.
இதனிடையே நீதிமன்ற நடவடிக்கையை விமர்சித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதி சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இயக்குனர் பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த பாரதி ராஜா பேசுகையில், சூர்யா தவறாகவும் நடக்க மாட்டார், தவறாகவும் பேச மாட்டார் என்றும் கூறியுள்ளார். மேலும் திரைப்படங்களை திரைக்கு கொண்டு செல்ல என்று நாங்கள் முயற்சிக்கிறோம், படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நாங்கள் ஒரு புதிய தயாரிப்பு சங்கம் தொடங்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…