நம்ம தப்பு பண்ணா கூட சூர்யா சார் சொல்லுவாரு- ஆர்யா ஓபன் டாக்.!

Published by
பால முருகன்

சூர்யா குறித்து நடிகர் ஆர்யா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். 

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான  திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில்கலையரசன், பசுபதி, ஜான், ஷபீர் கல்லரக்கல் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நேரடியாக இந்த திரைப்படம் கடந்த 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியானது. வெளியாகி ரசிகர்கள் மட்டுமின்றி பல சினிமா பிரபலங்களும் படத்தை பாராட்டி வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக பலர் ஆர்யாவை பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் ஆர்யாவுடன் நேர்காணலில் சூர்யா மற்றும் அஜித்துடன் நடித்துள்ளீர்கள் இருவரும் சார்பட்டா பரம்பரை டிரைலரை பார்த்து விட்டு பாராட்டினார்களா என்று கேட்டதற்கு ஆர்யா ” சூர்யா சார் கால் செய்து நன்றாக இருக்கிறது என பாராட்டினார். படத்தின் டிரைலரை அவர்தான் வெளியிட்டார். எனக்கு மிகவும் சந்தோசம் இதற்கு மிகவும் நன்றி. சூர்யா சார் பயங்கரமா உற்சாகப்படுத்துவார். நன்றாக இருந்தால் நன்றாக இருக்கிறது என்று உன்மையாக சொல்வார். அதே சமயம் நம்ம தப்பு செய்தால் அதையும் சொல்வார்” என்று தெரிவித்துள்ளார். சூர்யாவுடன் நடிகர் ஆர்யா இணைந்து காப்பான் படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

8 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

8 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

8 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago