கையில் வாலுடன் கம்பீரமாக நடந்து செல்லும் சூர்யா..!! சூர்யா 40 படத்தின் அப்டேட்..!!
கையில் வாலுடன் மிரட்டலாக நடந்து செல்லும் சூர்யாவின் புகைப்படத்தை சன்பிக்ச்சர்ஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் சூர்யா அடுத்தாக தனது 40 வது திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இதனை தொடர்ந்து தற்போது சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தில் நடிகர் சூர்யா தலையில் அதிக முடியுடன் கையில் மிக பெரிய வாலுடன் கம்பீரமாக நடந்து செல்கிறார்.
.@Suriya_offl from the sets of #Suriya40BySunPictures@pandiraj_dir @immancomposer #Suriya40 pic.twitter.com/gBXR3KIZ1e
— Sun Pictures (@sunpictures) April 9, 2021