நடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. அதேபோல சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டு பிள்ளை படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், படத்தின் சூட்டிங் இந்த முடியாத காரணத்தினால் செப்டம்பர் இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நம்ம வீட்டு பிள்ளையும் காப்பானும் மோத அதிக வாய்ப்புள்ளது.
ஒருவேளை இரு படங்களும் வெவ்வேறு தேதி ரிலீஸ் ஆனாலும், அடுத்ததாக வெளிவர இருக்கும் சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் டிசம்பர் 20 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து விட்டது. அதேபோல இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் சூரரைப் போற்று படமும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் எப்படியும் சூர்யா சிவகார்த்திகேயன் போட்டி கண்டிப்பாக இந்த வருடம் இருக்கும் என கோலிவுட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…