9 எபிசோட் வீதம் உருவாகவுள்ள வெப் சீரிஸின் ஒரு பகுதியில் சூர்யா நடிப்பதாகவும், 180 படத்தை இயக்கிய ஜெயேந்திர பஞ்சாபிகேஷன் இயக்குவதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் சூர்யா தற்போது சுதா கோங்குரா இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் சூரரை போற்று. ரிலீஸ்க்கு தயாராக இருந்த படம் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும், ஹரியின் அருவா படத்திலும், கே. வி. ஆனந்த் இயக்கத்தில் அயன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இவர் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதில் வரும் சம்பளத்தை அனாதை இல்லங்களுக்கு நிதியுதவியாக வழங்கவுள்ளராம்.
சமீபத்தில் மணிரத்னம் அவர்கள் ஓடிடி தளத்திற்காக வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்கவுள்ளதாக வும், 9 எபிசோடுகளை கொண்ட அந்த தொடரின் ஒவ்வொரு எபிசோடையும ஒவ்வோரு இயக்குநர் இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. அதாவது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான கௌதம் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் நரேன் உட்பட பல தெலுங்கு திரையுலகினை சேர்ந்த இயக்குநர்களும், நடிகர் சித்தார்த், அரவிந்த் சாமி ஆகியோரும் இந்த தொடரின் மூலம் இயக்குநராக களமிறங்குகிறார்கள். இந்த நிலையில் சூர்யா அதில் ஒரு எபிசோடில் நடிக்கிறார். ‘நவரசா’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வெப் சீரிஸை ஜெயேந்திர பஞ்சாபிகேஷன் இயக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் சித்தார்த், பிரியா ஆனந்த் மற்றும் நித்யா மேனன் நடித்த ‘180’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…