இரட்டை வேடங்களில் கலக்கவிருக்கும் ‘சூர்யா’.! அதுவும் தந்தை-மகனாமே.? ‘வாடிவாசல்’ குறித்த சூப்பர் தகவல்.!
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல இயக்குனரான வெற்றிமாறன் தனுஷின் அசுரன் படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டை தொடர்ந்து சூரியை வைத்து படத்தை இயக்கி வருகிறார் .ஜெயமோகனின் “துணைவன்” எனும் ஒரு நாவலை தழுவி உருவாக்கப்படவுள்ள இந்த படத்தில் பவானி ஸ்ரீ, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.தற்போது அதன் படப்பிடிப்பில் மும்மரமாக செயல்பட்டு வரும் வெற்றிமாறன் அதனை தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தினை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை மையமாகக் கொண்டு உருவாகும் படம் இது.கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பை ஜூலையில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது . ஏற்கனவே இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அந்த இரண்டு கதாபாத்திரங்களை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது சூர்யா வாடிவாசல் படத்தில் தந்தை ,மகன் என்ற இரு கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் ,அதில் தந்தையின் பெயர் ‘அம்புலி’ என்றும் ,மகனின் பெயர் ‘பிச்சு’ என்றும் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும்.இதனிடையே சூர்யா சூர்யா 40, சிறுத்தை சிவாவுடன் ஒரு படம் என பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.