யாஷூடன் கைக்கோர்க்கும் சூர்யா பட இயக்குநர்.!

யாஷ் அடுத்ததாக லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கே. ஜி. எஃப் படத்தின் மூலம் பிரபலமானவர் கன்னட நடிகர் யாஷ். தற்போது இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கே. ஜி. எஃப் சாப்டர் 2 ல் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்ததாக இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் லிங்குசாமி சூர்யாவின் அஞ்சான் படத்தின் தோல்வியை தொடர்ந்து பல தோல்வியை சந்தித்தார். இந்நிலையில் கன்னட சினிமாவின் வசூல் மன்னனான யாஷ் அவர்களை வைத்து தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாகும் ஒரு படத்தை ஒரே நேரத்தில் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025
“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!
February 28, 2025