மீண்டும் வருமா காக்க காக்க -2..? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் சூர்யா

Default Image

இரண்டாம் பாகம் தயாரானால் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று விடும் என்பதில் எந்த சந்தேகமில்லை.

நடிகர் சூர்யா தற்பொழுது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் முதல் ஹிட் படமாக அமைந்தது காக்க காக்க. மேலும்  இந்த படம் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்ற ஒரு படம். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அவரது மனைவி ஜோதிகா நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இதற்கான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது, மேலும் இந்த இரண்டாம் பாகம் தயாரானால் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று விடும் என்பதில் எந்த சந்தேகமில்லை. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்