சூர்யா நடித்து வரும் ஏதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். படத்தில் , ராதிகா, சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த திரைப்படத்தின் மூன்று லுக் போஸ்ட்டர்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த நிலையில் விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி, காரைக்குடியில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது எனவும், இந்த ஷெட்யூல்ட் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிவரை நடக்க உள்ளது. அத்துடன் படத்தின் பெரும்பகுதி முடிக்கப்பட்டுவிடும் என்று தகவல்கள் கசிந்துள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
புதுடெல்லி : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…
கொல்கத்தா : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொண்டது. எனவே, அவருடைய…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…