லிஸ்ட் பெருசா போகுதே! சூர்யாவை இயக்க உள்ள சிவகார்த்திகேயன் பட இயக்குனர்!

சூர்யா நடிப்பில் தற்போது தயராகியுள்ள திரைப்படம் சூரரை போற்று. சுதா கொங்காரா இயக்கியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டது. இப்பட போஸ்ட் ப்ரொடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படம் அடுத்த வருட ஏப்ரலில் வெளியாக உள்ளது.
இப்படத்தை அடுத்து சூர்யா யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. சூர்யாவை இயக்க உள்ள இயக்குனர் லிஸ்டில், ஹரி, கெளதம் வாசுதேவ் மேனன், பாலா, வெற்றிமாறன் என லிஸ்ட் பெரிதாக இருந்தது. இதில் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என இன்னும் உறுதியாக தெரியவில்லை.
இதற்கிடையில் இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் சூர்யாவுக்காக ஒரு கதை கூறியுள்ளாராம் இந்த படத்தை ட்ரீம் வாரியார் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்பட ஷூட்டிங் அடுத்த வருட பிப்ரவரியில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில் ரவிக்குமார் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து எடுத்துவரும் புதிய படத்தை ஜனவரி மாதத்திற்குள் முடித்துவிடுவாராம். அதற்கடுத்து சூர்யாவை இயக்க ரவிக்குமார் இயக்க உள்ளார் என தெரிகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025