சூர்யா தனது தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரித்துள்ள 4 திரைப்படங்கள் அமேசான் பிரேமில் வெளியாகவுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தனது தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் வாயிலாக பல தரமான படங்களை தயாரித்து அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். கடைசியாக 2டி நிறுவன தயாரிப்பில் சூர்யாவே நடித்து வெளியான திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தை அமேசான் பிரைம் வீடியோ OTT தளத்தில் சூர்யா வெளியிட்டிருந்தார்.
தற்போது அதே போல, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ரிலீசுக்கு தயாராகியுள்ள 4 திரைப்படங்களை அமேசான் நிறுவனம் வாங்கி அடுத்த மாதம் முதல் மாதம் தலா ஒரு படம் என வெளியிட உள்ளது. அதில் முதல் படமாக செப்டம்பரில்அரிசில் மூர்த்தி என்பவர் இயக்கியுள்ள ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் எனும் திரைப்படம் வெளியாக உள்ளது. அடுத்ததாக அக்டோபர் மாதத்தில் உடன்பிறப்பே எனும் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சசிகுமார் – ஜோதிகா, அண்ணன் – தங்கையாக நடித்துள்ளனர். இரா.சரவணன் என்பவர் இயக்கியள்ளார்.
அடுத்ததாக நவம்பர் மாதம் இயக்குனர் தா.சே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம் வெளியாக உள்ளது. அடுத்ததாக அருண் விஜய் மற்றும் அவரது மகன் நடித்துள்ள ஓ மை டாக் (OhMyDog) எனும் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த தகவல்களை அமேசான் நிறுவனம் மற்றும் 2டி பட நிறுவனமும் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…