14 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் சூர்யா-ஜோதிகா .!
14 வருடங்களுக்கு பிறகு சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து ஹலீதா ஷமீம் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2009-ல் வெளியான “பூவெல்லாம் கேடடுப்பார்” மூலம் காதலில் விழுந்த சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியினர் இன்றும் ரசிகர்களின் பேவரட் தம்பதிகளில் ஒருவராக திகழ்ந்து வருகின்றனர் . அதனையடுத்து உயிரிலே கலந்தது ,காக்க காக்க ,மாயாவி , பேரழகன் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த இவர்கள் கடைசியாக சில்லனு ஒரு காதல் படத்தில் 2006ல் நடித்தனர் . அதனையடுத்து திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை நோக்கும் பொறுப்பை ஏற்றார் ஜோதிகா.
அதனையடுத்து கடந்த 2016-ஆம் ஆண்டு ’36 வயதினிலே” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா , தொடர்ந்து பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு பல மெகா ஹிட் படங்களை ரசிகர்களுக்கு அளித்தார் . இந்த ஜோடியை மீண்டும் திரையில் ஒன்றாக காண ரசிகர்கள் இன்றும் ஆசைப்படுகின்றனர் . அதனை நிறைவேற்றும் வகையில் 14 வருடங்களுக்கு பிறகு சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக சூர்யா சமீபத்தில் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார் .
அந்த படத்தை ஹலீதா ஷமீம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . இவர் சில்லுக்கருப்பட்டி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சூர்யா-ஜோதிகா இணைந்து நடிக்கும் இந்த படத்தை மலையாள இயக்குநரான அஞ்சலி மேனன் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.