பாலா இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தை நடிகர் சூர்யா தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடிகர் அதர்வா தற்போது ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு நேற்று தொடங்கப்பட்டது. இந்த படத்தில் அதர்வாவுடன் முன்னணி நடிகரான ராஜ் கிரணும், முன்னணி நடிகையான ராதிகாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
அதர்வாவிற்கு ஜோடியாக பிரபல நடிகையான ஆஷிகா ரங்கநாத் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு. அடுத்த மாதம் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
அடுத்ததாக நடிகர் அதர்வா இயக்குனர் பாலா இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாகவும், படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், தகவல்கள் பரவி வந்தது.
இந்த நிலையில், தற்போது பாலா – அதர்வா கூட்டணியில் உருவாகும் படத்தை பிரபல நடிகரான சூர்யா தனது 2D நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அதர்வா பரதேசி என்ற படத்தில் நடித்திருந்தார். படத்தில் அவர் நடித்ததற்கு பல தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்தது.இந்த நிலையில், மீண்டும் பாலா இயக்கத்தில் அதர்வா நடிப்பது உறுதியாகி விட்டால் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. இதற்கான அறிவிப்பு வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .
டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…
கோலம் போடுவதில் மறைத்திருக்கும் ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை :நம்முடைய தமிழர்களின் பண்பாடு ஏதேனும் ஒரு…
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) PSLV-C60 பயணத்தில், விண்வெளியில் விதையை முதலில் முளைக்க வைத்து, இலைகளை துளிர்…