மிரட்டல் வக்கீலாக களமிறங்கும் சூர்யா.! ‘ஜெய் பீம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.!
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படத்திற்கு ‘ஜெய் பீம்’ என தலைப்பு வைத்துள்ளனர்.
நடிகர் சூர்யா தற்போது நவரசா என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த திரைப்படத்திற்கான மூன்று லுக் போஸ்டர்களும் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியீட்டுள்ளது. இன்று சூர்யா தனது 46 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகை சார்ந்த பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
அவருக்கு பிறந்தநாள் பரிசளிக்கும் வகையில் சூர்யாவின் 39 வது படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியீடபட்டுள்ளது. இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படத்திற்கு ‘ஜெய் பீம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை சூர்யா 2 டி நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ளார். படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜீஷா விஜயன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள்.
Excited to share the First Look of #JaiBhim #ஜெய்பீம்@prakashraaj @tjgnan @RSeanRoland @srkathiir @KKadhirr_artdir @philoedit @anbariv @rajisha_vijayan #Manikandan #LijoMolJose @joshikamaya @PoornimaRamasw1 @thanga18 @kabilanchelliah @proyuvraaj @rajsekarpandian @2D_ENTPVTLTD pic.twitter.com/acDoYuir2K
— Suriya Sivakumar (@Suriya_offl) July 23, 2021