தனுஷின் 44 வது திரைப்படத்தை இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளதாகவும் அந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
அதை தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேனுடன் “D43” படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு இன்றுடன் முடிந்துள்ளது. மேலும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இரண்டு மாதங்கள் கழித்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் தனுஷ் தற்போது அமெரிக்காவிற்கு சென்று தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் . இந்த படத்தின் நாளை முதல் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷின் 44 வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பார் என்றும் கடந்த ஆண்டு அறிவித்தனர். மேலும் அந்த படத்தை எந்த இயக்குனர் இயக்கப்போகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. ஆம் தனுஷின் 44 வது திரைப்படத்தை இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளதாகவும் அந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் மார்ச் மாதம் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது, அதை போல் டான் படத்திலும் சூர்யாவின் 40 வது படத்திலும் இவர் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…
ஐரோப்பா : ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார்…
தெலுங்கானா : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையின் நேற்று ஒரு பகுதி…
சென்னை : இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் பிற்பகல் 2.30 மணிக்கு…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…