படப்பிடிப்புக்கான முதல்கட்ட பணியை தொடங்கிய சூர்யா.! வைரல் வீடியோ உள்ளே.!
காளையுடன் நின்றவாறு உள்ள சூர்யாவின் சமீபத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வருபவர் சூர்யா . சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் ரசிகர்களைடையே நல்ல வரவேற்பை பெற்று ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகியது குறிப்பிடத்தக்கது.அதனை தொடர்ந்து நவரசா எனும் வெப் தொடரில் நடித்து வந்த இவருக்கு கடந்த பிப்ரவரி 4-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது .
அதன் பின் அதிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய பின்னர் பள்ளி திறப்பு விழா ஒன்றில் மனைவி ஜோதிகாவுடன் முதல் முறையாக கலந்து கொண்டதும், அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தற்போது நீண்ட முடியுடன் ஒரு பெரிய காளை மாட்டிற்கு அருகில் சூர்யா நிற்பது போன்றும் ,அதனை ஒருவர் புகைப்படம் எடுப்பது போன்றும் வீடியோ வெளியாகி உள்ளது.இது சூர்யா 40 படத்திற்காக எடுக்கப்பட்டதா அல்லது வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திற்காக எடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது .
அதே நேரத்தில் சூர்யா இன்று முதல் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் சூர்யா 40 படத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
#VaadiVaasal ???? practice today @Suriya_offl anna❤
Sambavam loading????????#Suriya40 #Navarasa pic.twitter.com/JcYoH1EPxB
— Suriya Fans Trend™ (@Suriyatrendoffl) March 14, 2021