ஜல்லிக்கட்டு காளையுடன் விளையாட தயாராகும் சூர்யா.! அக்டோபரில் துவக்கம்…

வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகாராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள ஜெய்பீம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் சூர்யா. கவனம் செலுத்தி வருகிறார் .
இந்த படங்களை முடித்த பிறகு நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில், வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதாவது, வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024