சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேற்றம்..!! சோகத்தில் சூர்யா ரசிகர்கள்..!!
ஆஸ்கர் விருதிற்கு தேர்வான படங்களின் இறுதி பட்டியலில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் இடம்பெறவில்லை
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவிருந்த இந்த படம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமேசான் பிரேமில் வெளியானது. ரசிகர்களுக்கு மத்தியில் இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
இந்த படத்திற்கு பல விருதுகள் கிடைப்பதாக அறிவிக்கப்பட்டது ஆம் , உதரணமாக கடந்த ஜனவரி மாதம் இந்த திரைப்படம் ஆஸ்கர் பொதுப்பிரிவிக்கு தேர்வு செய்யப்பட்டது. அதற்கு பிறகு ஆஸ்கர் விருதிற்கு தகுதி பெற்ற 366 படங்களிலும் இந்த திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. சூர்யா ரசிகர்கள் அனைவரும் ஆஸ்கர் விருத்திற்கான இறுதி பட்டியலில் இடம்பெறும் என்று ஆவலுடன் காத்திருந்தார்கள்.
மேலும் தற்போது ஆஸ்கர் விருதிற்கு தேர்வான படங்களின் இறுதி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் இடம்பெறவில்லை இதனால் சூர்யா ரசிகர்கள் சிலர் வருத்தத்துடன் இருக்கிறார்கள்.