சூர்யா – லோகேஷ் கனகராஜ் கூட்டணி.? எதிர்பார்பில் ரசிகர்கள்.!

Default Image

Rain On Films தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்போது இந்த படங்களை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக காரைக்குடியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கும் திரைப்படம் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. அதன்படி, லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தை மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ், வெற்றிமாறன், கவுதம்மேனன், லிங்குசாமி, மிஷ்கின், சசி, வசந்தபாலன், பாலாஜி சக்திவேல்  ஆகியோர் இணைந்து தொடங்கிய Rain On Films தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதாகவும் படத்தில் நாயகனாக நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்