குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடிய சூர்யா …..!
நடிகர் சூர்யா அவரது குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் தங்கள் இல்லங்களில் கோலாகலமாக பொங்கல் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சூர்யா அவர்களும் அவரது மனைவி மற்றும் சகோதரருடன் இணைந்து பொங்கல் கொண்டாடி உள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.