சூர்யா – பாலா கூட்டணியில் உருவாகும் படத்தில் இணையும் இளம் நடிகை.?!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வரும் 10-ஆம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக இயக்குனர் பாலாவிடம் நடிகர் சூர்யா 3 மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளதா கவும், அதற்கு மேல் 1 நாள் ஆக கூடாது என உறுதியாக கூறியுள்ளாராம்.
இதனால், இயக்குனர் பாலா வேகமாக படத்தை முடிக்கவேண்டும் என படத்திற்கான வேலைகளை விறு விறுப்பாக ஆரம்பித்துள்ளாராம். இந்த படத்தில் ஜோதிகா சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சூர்யாவை வைத்து இயக்கிய நந்தா, பிதாமகன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதால் இந்த படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
RR vs KKR: அடுத்தடுத்த சரிந்த விக்கெட்டுகள்… பந்து வீச்சில் மிரட்டிய கொல்கத்தா.! ரன் அடிக்க திணறிய ராஜஸ்தான்.!
March 26, 2025
RR vs KKR : வெற்றிக்கான மோதல்! கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு… பிளேயிங் லெவனில் மாற்றம்.!
March 26, 2025
விடைபெற்றார் மனோஜ்… தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த மகள்..!
March 26, 2025