மீண்டும் சிங்கக்கூட்டணியுடன் களமிறங்க உள்ள சூர்யா! ஆனால் சிங்கம் இல்லையாம்!

- சூர்யா நடிப்பில் அடுத்ததாக சூரரை போற்று திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.
- ஆறு, வேல், சிங்கம் பாகங்களை தொடர்ந்து மீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யாவிற்கு கடைசியாக வெளியான தானா சேர்ந்த கூட்டம், என்.கே.ஜி, காப்பான் ஆகிய படங்கள் எதிர்பார்த்த பெரிய வெற்றியை கொடுக்க தவறியது. ஆதலால், அடுத்த படத்தை பெரிய ஹிட் படமாக கொடுக்க சூர்யா திட்டமிட்டுள்ளாராம். அதனால்தான் சூரரை போற்று திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளதாம். அதற்கு இடையில் ஒரு பெரிய அப்டேட் கொடுக்கலாம் என பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம்.
அதில் வெற்றிமாறன், ஹரி, கௌதம் வாசுதேவ் மேனன் என பலர் லிஸ்டில் உள்ளனர். இதில் யார் படத்தை முதலில் சூர்யா நடிக்க உள்ளார் என தெரியாமல் இருந்து வந்தது. தற்போது ஏற்கனவே தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளாராம். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.