சூர்யாவின் 40வது படத்தை இயக்க உள்ள வெற்றிமாறன்! அப்போ 39வது படத்தை இயக்குவது யார்?!

- சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் சூரரை போற்று.
- இப்படத்தை அடுத்து சூர்யாவின் 40வது திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
சூர்யா தற்போது தனது 38ஆவது திரைப்படமாக சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து விட்டது. இப்படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது. இப்படத்தை அடுத்து சூர்யாவின் 40வது திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அப்போ சூர்யாவின் 39வது திரைப்படத்தை இயக்குவது ஹரி என தற்போது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. அதற்கிடையே வெற்றிமாறன் யார் படத்தை இயக்குவார் என தற்போது கேள்வி எழுந்துள்ளது. அனேகமாக சூரியின் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. விரைவில் வெற்றிமரன் அடுத்து இயக்கவுள்ள திரைப்படம் பற்றி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.