ஆச்சரியப்பட வைத்த தொழிலதிபர்.! டிவிட்டர் பதிவை ‘ரீ-ட்வீட்’ செய்பவர்களுக்கு ரூ.6.5 லட்சம் பரிசு தொகை.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • ஜப்பானின் யூசகு என்ற தொழிலதிபர் பிரபல பேஷன் ஆன்லைன் நிறுவனமான ஜோஜோடவுனின் சி.இ.ஓ பதவியில் இருக்கிறார்.
  • டிவிட்டரில் தான் பதிவிடும் ட்வீட்டை ரீட்வீட் செய்பவர்களில் 1000 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தலா ரூ.6.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த உலகத்தில் அனைவரும் வித்யாசமான ஆசைகளை கொண்டு இருப்பார்கள். அதில் மற்றவர்களுக்கு பரிசளிப்பதும், அல்லது ஏழ்மை மக்களுக்கு உதவி பண்ணுவதும், உள்ளிட்ட பல ஆசைகள் இருக்கும். இந்த நிகழ்வு ஏற்படும் போது அதை அடைபவர்கள் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறார்களா  என்பதை தெரிந்துகொள்ள வளாக இருப்பார்கள். அதுபோன்று தொழிலதிபர் ஒருவர் அவரது வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டு, தற்போது உலகம் முழுவதும் பிரபலம் ஆகியுள்ளார்.

அதாவது ஜப்பானின் யூசகு என்ற தொழிலதிபர் பிரபல பேஷன் ஆன்லைன் நிறுவனமான ஜோஜோடவுனின் சி.இ.ஓ பதவியில் இருக்கிறார். இவர் சமீபத்தில் நிலாவுக்கு வான்வழி ட்ரிப் கூட்டிக்கொண்டு போவதற்கு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம்  பல கோடிகளை கொடுத்து முன்பதிவு செய்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். மேலும், பல வரலாற்று சிறப்பிமிக்க பொருட்கள் மற்றும் கலைநய பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவதும், பின்னர் ஸ்போர்ட்ஸ் ரக கார்களை கோடிக்கணக்கில் வாங்கி சேர்ப்பது என உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஒரு புதிய முயற்சியின் மூலம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். அதாவது டிவிட்டரில் தான் பதிவிடும் ட்வீட்டை ரீ-ட்வீட் செய்பவர்களில் 1000 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தலா இந்திய மதிப்புப்படி ரூ.6.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார். பின்னர் இந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 1000 பேரும் 7-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என்று அந்த ட்வீட்டிலும் பதிவிட்டுருந்தார்.

மேலும், இதற்கு காரணத்தையும் யூ-ட்யூப் வீடியோ மூலம் தெரிவிப்பதாக கூறி அந்த வீடியோவில், இந்தப்பணம் குறிப்பிட்ட நபர்களை எந்த அளவுக்கு சந்தோசப்பட வைக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முயற்சி, இந்த பணத்தின் தாக்கம் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். பின்னர் சொன்னபடியே தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 பேருக்கு பரிசுத்தொகையை அவர் அளித்துள்ளார். அவரின் ட்வீட்டை சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அவரது ட்விட்டை ரீ-ட்வீட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

5 hours ago

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

6 hours ago

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

7 hours ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

8 hours ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

8 hours ago

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

9 hours ago