கடந்த 2018-ம் ஆண்டு பிரபஞ்சத்தில் இருக்கும் கோடிக்கணக்கான கேலக்சிகளில் பூமியைப் போல ஏதாவது கிரகம் இருக்கிறதா என்ற தேடுதலில் டெஸ் என்ற செயற்கை கோளை நாசா விண்ணில் ஏவப்பட்டது. அதில் விண்வெளியில், நட்சத்திரங்களுக்கு இடையே, பூமியை போல, ஏதாவது கோள்கள் சுற்றுவட்ட பாதையில் செல்கின்றனவா என்பதையும், அதனால் அந்த நட்சத்திரங்களின் ஒளியில் ஏற்படும் மாறுபாடுகளையும் ஆய்வு செய்வது தான் இதன் டெஸ் என்ற செயற்கைகோளின் வேலை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விண்வெளியில், பூமிக்கு அருகே புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்காவின் ‘நாசா’ விஞ்ஞானிகள் தற்போது அறிவித்துள்ளனர். இந்த ஆய்வில், பூமியில் இருந்து சுமார் 100 ஒளியாண்டுகள் தொலைவில் ஒரு புதிய கோள் இருப்பதை நாசா ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு ‘டி.ஓ.ஐ.700டி’ என, விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது பூமியை விட, 20% சதவீதம் பெரிதாக காணப்படுகிறது. இந்த கோள், தன்னைத்தானே 37 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. பின்னர் பூமிக்கு கிடைக்கும் சூரிய சக்தியில் 87 சதவிகிதம் இந்த புதிய கோளுக்கும் கிடைப்பதாகவும் நாசா கூறியுள்ளது.
மேலும் இக்கோள், அதன் நட்சத்திரத்தில் இருந்து அதிக தொலைவிலோ அல்லது நெருங்கியோ இல்லாமல் உள்ளதால், பூமியை போல, தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளதாக, ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். நாசா விஞ்ஞானிகள், புதிய கோளின் மூன்று மாதிரிகளை உருவாக்கி, ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை, டெஸ் செயற்கைக் கோள், ‘டி.ஓ.ஐ.,700 பி, சி, டி. என்ற மூன்று கோள்களை கண்டுபிடித்துள்ளது.
டெல்லி : வரும் பிப்ரவரி மாதம் டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில்…
சென்னை : எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு…
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…