ஆச்சரியம்.! 100 ஒளியாண்டு தூரத்தில் பூமியை போல் மற்றொரு புதிய கோள் ஆய்வில் நாசா கண்டுபிடிப்பு.!
- அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் விண்வெளியில், பூமிக்கு அருகே புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
- பூமியில் இருந்து சுமார் 100 ஒளியாண்டுகள் தொலைவில் ஒரு கோள் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு ‘டி.ஓ.ஐ.700டி’ என பெயரிட்டுள்ளனர்.
கடந்த 2018-ம் ஆண்டு பிரபஞ்சத்தில் இருக்கும் கோடிக்கணக்கான கேலக்சிகளில் பூமியைப் போல ஏதாவது கிரகம் இருக்கிறதா என்ற தேடுதலில் டெஸ் என்ற செயற்கை கோளை நாசா விண்ணில் ஏவப்பட்டது. அதில் விண்வெளியில், நட்சத்திரங்களுக்கு இடையே, பூமியை போல, ஏதாவது கோள்கள் சுற்றுவட்ட பாதையில் செல்கின்றனவா என்பதையும், அதனால் அந்த நட்சத்திரங்களின் ஒளியில் ஏற்படும் மாறுபாடுகளையும் ஆய்வு செய்வது தான் இதன் டெஸ் என்ற செயற்கைகோளின் வேலை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விண்வெளியில், பூமிக்கு அருகே புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்காவின் ‘நாசா’ விஞ்ஞானிகள் தற்போது அறிவித்துள்ளனர். இந்த ஆய்வில், பூமியில் இருந்து சுமார் 100 ஒளியாண்டுகள் தொலைவில் ஒரு புதிய கோள் இருப்பதை நாசா ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு ‘டி.ஓ.ஐ.700டி’ என, விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது பூமியை விட, 20% சதவீதம் பெரிதாக காணப்படுகிறது. இந்த கோள், தன்னைத்தானே 37 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. பின்னர் பூமிக்கு கிடைக்கும் சூரிய சக்தியில் 87 சதவிகிதம் இந்த புதிய கோளுக்கும் கிடைப்பதாகவும் நாசா கூறியுள்ளது.
மேலும் இக்கோள், அதன் நட்சத்திரத்தில் இருந்து அதிக தொலைவிலோ அல்லது நெருங்கியோ இல்லாமல் உள்ளதால், பூமியை போல, தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளதாக, ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். நாசா விஞ்ஞானிகள், புதிய கோளின் மூன்று மாதிரிகளை உருவாக்கி, ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை, டெஸ் செயற்கைக் கோள், ‘டி.ஓ.ஐ.,700 பி, சி, டி. என்ற மூன்று கோள்களை கண்டுபிடித்துள்ளது.இதில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோள்தான், பூமிக்கு நெருக்கமான அம்சங்களுடன் உள்ளதாக, நாசா தெரிவித்துள்ளது.