தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அன்போடு நடிப்பின் நாயகன் என்று அழைக்கப்படும் சூர்யா சினிமாவிற்குள் நுழைந்து இன்றுடன் 25-வது வருடத்தை பூர்த்தி செய்கிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
சூர்யா சினிமாவிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடி வரும் அவரது ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஒரு தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், சூர்யா 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரமாண்ட படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளாராம்.
இதையும் படியுங்களேன்- கயல் ஆனந்தி இப்படிப்பட்ட பெண்ணா..? அவரே கூறிய சூப்பர் சீக்ரெட்…
அதன்படி, இயக்குனர் நாக் அஸ்வின் இயக்க்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய பிரமாண்ட படம் ஒன்று உருவாகவுள்ளது. இந்த படத்திற்கு தாற்காலிகமாக “Project K” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அடுத்த ஆண்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
500 கோடி பட்ஜெட்டில், பிரமாண்டமாக இந்த படம் உருவாகவுள்ளதால், ஒவ்வொரு மொழியில் உள்ள பெரிய பிரபலங்களான சூர்யா, துல்கர் சல்மான் மற்றும் மகேஷ்பாபு ஆகியோரை சிறப்பு தோற்றத்தில் படத்தில் இடம்பெறச் செய்ய இயக்குனர் நாக் அஸ்வின் முயற்சித்து வருகிறாராம்.
தமிழில் தற்போது சூர்யா இப்படத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் எனும் சிறப்பு தோற்றத்தில் வந்து அனைவரையும் மிரட்டி இருந்தார் நடிகர் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…