மீண்டும் இணைந்த சூர்யா-ஹரி ! அருவா படத்தின் அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்
இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் ஆறு,வேல்,சிங்கம் -1 ,சிங்கம்-2 ,சிங்கம் 3 என்ற படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.சூர்யாவின் 39-வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.அதாவது சூர்யாவின் 39-வது படத்தை ஹரி இயக்குகிறார்.இந்த படத்திற்கு அருவா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார் என்றும் படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.