ஹீரோவாக அறிமுகமாகும் சூரி.! படத்தின் டைட்டில் என்ன தெரியுமா.?

வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக சூரி நடிக்கும் படத்தின் டைட்டில் ‘அஜ்னபி’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் நகைச்சுவை நடிகராக கலக்கிய சூரி தற்போது ஹீரோவாகவும் அறிமுகமாகிறார். ஆம் வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் சூரியின் இந்த படத்தை எல்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கிறது.
நாவல் அடிப்படையில் உருவாகும் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சூரி ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு ‘அஜ்னபி’ என்று பெயரிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்த படம் அஜ்னபி என்ற நாவலை தழுவியதாம் .இப்படத்திற்காக சூரி தாடி, மீசையுடன் கெத்தான கெட்டப்பில் மாறியது குறிப்பிடத்தக்கது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025