ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் பிரெண்ட்ஷிப் படத்திற்கு சுரேஷ் ரெய்னா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் “பிரெண்ட்ஷிப்”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிக் பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியா நடித்துள்ளார். ஜே.பி.ஆர் – ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இந்த படத்தை இயக்கியுள்ளனர்.
பிளாக் ஷீப் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள உருவாகியுள்ள இந்த படத்தில் அர்ஜுன், பாலா, சதீஷ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். டிஎம் உதயகுமார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் டீசர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது ட்வீட்டர் பக்கத்தில் ” பஜ்ஜி பா ஹர்பஜன் சிங் என் அண்ணாத்த! பிரெண்ட்ஷிப் ட்ரைலர், டீஸர் எல்லாம் வலிமையா இருக்கு படம் கண்டிப்பா பீஸ்டா இருக்கப்போகுது.பிரெண்ட்ஷிப் டீம்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.மக்களே நீங்க எல்லாரும் நாளைக்கு தியேட்டர்ல படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க” என தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ரஜினி நடித்துள்ள அண்ணாத்த, அஜித் நடித்துள்ள வலிமை, விஜய் நடித்து வரும் பீஸ்ட் ஆகிய மூன்று படங்களில் தலைப்பை வைத்து தமிழில் சுரேஷ் ரெய்னா ட்வீட் செய்திருப்பதால் அந்த ட்வீட் தற்போது லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…