“வா மகளே வெற்றி வாகை சூடி கொண்டு வா” -சனம் குறித்து சுரேஷ் சக்கரவர்த்தியின் ட்வீட் பதிவு.!

“வா மகளே வெற்றி வாகை சூடி கொண்டு வா” என்று கூறியதுடன் நீங்கள் தான் உண்மையான வெற்றியாளர் என்று கூறி சனமிற்கு சுரேஷ் சக்கரவர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்றைய தினம் சனம் வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . வீட்டில் அனைவரிடமும் பல பிரச்சினைகளில் சிக்கினாலும் தனது கருத்தை உறுதியாக தனியாக நின்று கூறுவார் .அவ்வாறு தனியாக நின்று விளையாடிய அவர் வெளியேற குரூப்பாக விளையாடும் சிலர் இன்னும் வீட்டினுள் உள்ளனர் . இதுகுறித்து பல நெட்டிசன்களும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வந்தனர் .
இந்த நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய அவருக்கு பலர் பாசிட்டிவ் கமென்ட்களை கூறி வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தியும் ட்வீட் ஒன்றை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .அவர் பகிர்ந்த ட்வீட் பதிவில் ,சனம் நீங்கள் ஒரு உண்மையான போராளி மற்றும் உண்மையான வெற்றியாளர் என்று கூறியதுடன் வா மகளே வெற்றி வாகை சூடி கொண்டு வா என்றும் பதிவிட்டுள்ளார்.இதற்கு சனம் உங்கள் அன்புக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார் .
Sanam you are a real@fighter and winner. Vaa Magale vaa veteri vaagai choodi kondu vaa
— Suresh Chakravarthy (@susrisu) December 6, 2020
Thanku For the Love ???????? https://t.co/WqCWQD4bdf
— Sanam Shetty (@SanamShetty_) December 6, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025