கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடிக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மத்திய ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடி கொரோனா பாதிப்பு கடந்த 11ம் தேதி உறுதி செய்யப்பட்டது.இதனால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடிக்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 4வது பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் அங்காடி என்பது குறிப்பிடத்தக்கது.
சுரேஷ் அங்காடி கர்நாடகா மாநிலம் பெலகாவி தொகுதியில் இருந்து 4 முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த ரெயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடிக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது: சுரேஷ் அங்காடி ஒரு அர்ப்பணிப்புமிக்க பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் திறமையான அமைச்சராக இருந்தார். அவர் கர்நாடகாவில் கட்சியை பலப்படுத்த கடுமையாக உழைத்தவர். திறமையான அமைச்சராக இருந்த அவரின் மறைவு வருத்தமளிக்கிறது என்று மோடி பதிவிட்டுள்ளார்.
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…