நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பி) மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏ) மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளை விரைந்து விசாரித்து முடித்து, தீர்ப்பு வழங்கவேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகள் தண்டனை பெற்றால், தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை உள்ள நிலையில், அதை ஆயுள் காலம் முழுவதும் நீட்டிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை தலைமை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அந்த விசாரணையில், எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விரைவாக தீர்ப்பது தொடர்பான விசாரணை நீதிமன்றங்களுக்கு ஒரே மாதிரியான வழிகாட்டுதலை உருவாக்குவது கடினம். எனவே இந்த விசாரணைகளை கண்காணிக்க, ஒவ்வொரு உயர்நீதிமன்றத்திலும் சிறப்பு அமர்வு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த சிறப்பு அமர்வு உயர்நீதிமன்றங்களுக்கு தொடர்ச்சியான வழிகாட்டுதல்களை வெளியிடும் என்றும் உயர்நீதிமன்றம் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்களிலிருந்தும் இந்த வழக்கு விசாரணைகளின் நிலை குறித்த அறிக்கைகளை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சிறப்பு நீதிமன்றங்களுக்கு போதுமான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மாவட்ட நீதிபதிகள் உறுதி செய்ய வேண்டும். எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதைக் கண்காணிக்க தானாக முன்வந்து வழக்குகளை பதிவு செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…